எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்கலாம்..... விழா நடத்தக்கூடாது: ஐகோர்ட்

சென்னை: மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை காமராஜர் சாலையில் விழாக்கள் இன்றி எம்.ஜி.ஆர். நினைவு வளைவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நடத்தாமல் எம்.ஜி.ஆர். நினைவு வளைவின் மேல் உள்ள திரைகளை மட்டும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி ஜனவரி 17-ம் தேதி அவரது நினைவு வளைவு திறக்கப்பட உள்ளது.

அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

* நினைவு வளைவை தவிர எம்.ஜி.ஆரின் பெருமையை பறைசாற்ற தமிழக அரசு என்ன செய்தது? என ஐகோர்ட் வினவியுள்ளது.

* எம்.ஜி.ஆரின் கொள்கை, கருத்துக்களை பரப்ப தமிழக அரசு என்ன செய்தது?.

*காது கேளாதோர், பார்வையற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கொள்கை அரசு பின்பற்றியதா?

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: