ராகேஷ் ரோஷனுக்கு தொண்டை புற்றுநோய் : மகன் ஹிரித்திக் ரோஷன் தகவல்

மும்பை: இந்தி நடிகரும் இயக்குனருமான ராகேஷ் ரோஷனுக்கு தொண்டை புற்றுநோய் என  அவரது மகனும் நடிகருமான ஹிரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.இந்தியில்  காம்சோர், கூப்ஸூரத், பகவான் தாதா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர்  ராகேஷ் ரோஷன். ஹமாரி ஜீத், மஹா குரு, டாக்கு ஹசீனா, பகவான் தாதா ஆகிய இந்தி  படங்களில் ரஜினியுடன் இணைந்து ராகேஷ் ரோஷன் நடித்துள்ளார். கூன் பரி மாங்,  கரண் அர்ஜுன், கிரிஷ் உள்பட பல படங்களை அவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில்  அவருக்கு தொண்டை புற்றுநோய் தாக்கி இருப்பதாக அவரது மகனும் இந்தி நடிகருமான  ஹிரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘தொண்டை  புற்றுநோயின் முதல் ஸ்டேஜில் அப்பா இருக்கிறார். இன்று (நேற்று) அவருக்கு  ஆபரேஷன். இந்த நிலையிலும் தைரியத்தை அவர் இழக்கவில்லை. இன்று காலை என்னுடன்  ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்தார். எங்களுக்கு அவர் தைரியம்  சொல்கிறார். இவரைப் போன்ற ஒரு  குடும்பத் தலைவர் கிடைத்ததற்கு எங்கள்  குடும்பம் பெருமைப்படுகிறது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: