பரிசோதனை குறைவால் பாதிப்பு சரிவு டெல்லியில் 992 பேருக்கு தொற்று

புதுடெல்லி: டெல்லியில் தற்போது கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த வேளையில் நேற்று ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஹோலி காரணமாக திங்களன்று நடத்தப்பட்ட குறைவான கோவிட்-19 பரிசோதனைகளே இதற்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் ஒட்டுமொத்தமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,60,611 ஆக உள்ளது. இதுவரை 6.42 லட்சத்துக்கும் மேற்பட்ட  நோயாளிகள் முழு குணமடைந்து மீண்டுள்ளனர். கடந்த திங்களன்று 1,904 பேருக்கு தொற்று உறுதியானது. இது கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,881 ஆகவும், சனிக்கிழமை 1,558 ஆகவும், வெள்ளிக்கிழமை 1,534, வியாழக்கிழமை 1,515 பேருக்கும், புதன்கிழமை 1,254 பேருக்கும் மற்றும் கடந்த செவ்வாய்க்கிழமை  1,101 என தொற்று பதிவாகின. அதேபோன்று, நேர்மறை விகிதம் நேற்று முன்தினம் அதாவது திங்களன்று 2.77 சதவீதம், ஞாயிற்றுக்கிழமை 2.35 சதவீதம், சனிக்கிழமை 1.70 சதவீதம், வெள்ளிக்கிழமை 1.80 சதவீதம், வியாழக்கிழமை 1.69 சதவீதம், புதன்கிழமை 1.52 சதவீதம், கடந்த செவ்வாய்க்கிழமை 1.31 சதவீதமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நகரில் இந்த நோயின் தாக்குதலால் நேற்று மேலும் 4 பேர் இறந்தனர். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 11,016 ஆக உயர்ந்தது. ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 7,429 ஆக உள்ளது. இது திங்களன்று 7,545 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 28,618 ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் உட்பட மொத்தம் 36,757 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,832 ஆக உயர்ந்தது. திங்களன்று 1,849 ஆக இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை தற்போது1,903 ஆக உயர்ந்தது. இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post பரிசோதனை குறைவால் பாதிப்பு சரிவு டெல்லியில் 992 பேருக்கு தொற்று appeared first on Dinakaran.

Related Stories: