பிரதமர் நரேந்திர மோடி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது; துணிச்சல் மிகுந்த நம் வீரர்களுக்கு விமானப்படை நாள் வாழ்த்துகள். வீரத்துக்கும் தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் சான்றாக நமது விமானப்படை விளங்குகிறது. நம் நாட்டை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு அளப்பரியது எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது; விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மரியாதையுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்கள் வானத்தைப் பாதுகாப்பாகவும், எங்கள் உற்சாகத்தையும் உயர்வாக வைத்திருக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கும், தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம், ஜெய்ஹிந்த். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
The post நம் நாட்டை பாதுகாப்பதில் உங்களின் பங்கு அளப்பரியது: விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து appeared first on Dinakaran.