பீஜிங்: அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுக்கு இணையான வெடிகுண்டை சீனா சொந்தமாக உருவாக்கி சோதித்து பார்த்துள்ளது. அமெரிக்க ராணுவத்திடம் ஜிபிய-43/பி என்ற மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு (எம்.ஓ.ஏ.பி) உள்ளது. உ,லக நாடுகளில் உள்ள வெடிகுண்டுகளுக்கு எல்லாம் தாயாக இது அழைக்கப்படுகிறது. இதற்கு போட்டியாக சீனா தற்போது பெரிய வெடிகுண்டை உருவாக்கி தனது எச்-6கே போர் விமானத்தில் இருந்து வீசி சோதித்துள்ளது. இந்த குண்டு விமானத்தில் இருந்து வீசி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதற்கும் அமெரிக்காவை போல், வெடிகுண்டுகளின் தாய் என சீன அடை மொழி வைத்துள்ளது.