திருவாரூரில் கஜா நிவாரண பணிகளை தொடரலாம் : தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை : திருவாரூர் கஜா புயல் நிவாரண பணிகளை தொடர தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. திமுக தலைவரும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவுமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலைக்குறைவால் காலமானார். இதையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியான தொகுதி என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையம் காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்யும் நாள், திரும்ப பெறும் நாள், ஓட்டு எண்ணிக்கை நாளை அறிவித்தது.

இதற்கிடையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண பணிகளையும் நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் மக்களும், சமூக ஆர்வலர்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரியாக எந்த நிவாரண பொருட்களும் சேரவில்லை. எனவே நிவாரண பொருட்களை வழங்கிட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை தொடர்ந்து வைத்தனர்.இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று, திருவாரூர் தொகுதிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கஜா நிவாரண பணியை தமிழக அரசு தொடரலாம். மேலும் நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் எந்த அரசியல் கட்சிகளும் ஈடுபடக்கூடாது. அதற்காக அதிகாரிகள்தான் மேற்கொள்ள வேண்டும். இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி தீவிரமாக கண்காணிப்பார் என்று, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: