மதுராபுரி நரிக்குறவர் காலனியில் ரூ.6 லட்சத்தில் குடிநீர் தொட்டி: பூமிபூஜை போட்ட நரிக்குறவர்கள்

துறையூர்: துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரியில் நரிக்குறவர் காலனி உள்ளது . இங்கு சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு அடிப்படை வசதியாக குடிநீர் வசதி சரியான முறையில் இல்லை. 10 ஆயிரம் லிட்டர் தரைமட்ட நீர்தேக்க தொட்டி இருந்தும் அதில் தண்ணீர் இல்லை. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என நரிக்குறவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில்  கலெக்டரின் பொது நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். அதற்கான பணிகள் ஒப்பந்ததாரர் சீரங்கன் தலைமையில் நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது.  தங்களுக்காக கட்டப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தாங்களே பூஜைபோட்ட  நரிக்குறவர்கள் மகிழ்ச்சியுடன்  கலெக்டருக்கு நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: