நடிகையின் 8 சவரன் பிரேஸ்லெட் போலீஸ் கமிஷனர் ஆபீசில் மாயம்: அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கவந்த நடிகையின் 8 சவரன் பிரேஸ்லெட் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது.நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-2 உள்பட பல திரைப்படங்களில் இன்ஸ்பெக்டர், ஆசிரியர் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்தவர் எமி(49). இவர் முன்னாள் கவுன்சிலர். தூத்துக்குடியை சேர்ந்த இவர்,  சென்னை அடையாரில் வசித்து வருகிறார். ஒரு மோசடி புகார் தொடர்பாக கடந்த 29ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.

வீட்டுக்கு வந்து பார்த்தபோது தான் கையில் அணிந்து இருந்த 8 சவரன் பிரேஸ்லேட் மாயமாகியிருந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நடிகை எமி, உடனடியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து தேடினார். ஆனால் அவரது பிரேஸ்ேலட் கிடைக்கவில்லை. இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் கமிஷனர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: