கேட்டது சுடிதார்... அறிவித்தது பேன்ட் சீருடை மாற்றம்... சிறப்பான ஏமாற்றம்...அரசு மருத்துவமனை நர்சுகள் அதிருப்தி

நெல்லை: தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்சுகளுக்கு கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளை நிற சீருடை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் பெண் நர்சுகள் குட்டை பாவாடை அணிந்து பணியாற்றுகின்றனர்.  தங்களுக்கு 150 ஆண்டு காலத்திற்கு மேலாக உள்ள வெள்ளை சீருடையை மாற்ற வேண்டும், இதில் பெண் நர்சுகளுக்கு பாதுகாப்பாகவும், பணிக்கு இடையூறு இல்லாமலும் இருக்கும் வகையில் சுடிதார் சீருடை வழங்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். இதற்காக அவர்களிடம் விண்ணப்ப பாரம் அளித்த போது தங்களுக்கு வழங்கவேண்டிய சீருடை வடிவம் குறித்து குறிப்பிட்டு இருந்தனர். இந்தநிலையில் கடந்த 7ம் தேதி சுகாதாரத்துறை அறிவித்துள்ள உத்தரவில் நர்சுகளுக்கு வழங்கப்பட உள்ள புதிய சீருடைகள் குறித்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு குறவைாக பணியாற்றும் நர்சுகள் அணிய வேண்டிய சீருடை, 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நர்சுகளுக்கான சீருடை, ெபண் செவிலியர் செகன்ட் கிரேடு சீருடை மற்றும் முதல் கிரேடு பெண் நர்சுகளுக்கான வண்ண சீருடை விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் நர்சுகள் அணியவேண்டிய புதிய சீருடையும் அறிமுகமாகிறது.

இந்த புதிய சீருடை அணியும் முறை வருகிற புத்தாண்டு முதல் அமலுக்கு வரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள சீருடை தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என பல நர்சுகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண் நர்சுகளுக்கு சுடிதார் கேட்ட நிலையில் முதல்  நிலையில் உள்ளவர்களுக்கு பேண்ட் மாடலில் சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதை கடந்த நர்சுகள் பேண்ட் மாடலில் சீருடை அணிவதில் பல சிக்கல் உள்ளது. போலீஸ் துறையில் காவலர் முதல் காவல்துறை தலைவர் வரை ஒரே காக்கி நிற பேண்ட், ஷர்ட் அணிய விதி செய்யப்பட்டுள்ளது. அவர்களது பதவிக்கு ஏற்ப உடையில் தொப்பி, ஸ்டார், பட்டை, பெல்ட், ஷூ போன்றவை மாறுகின்றன.  நர்சுகளுக்கு சீருடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதில் பணி செய்யும் இடம், சூழல், உடல்வாகு என எந்த விஷயங்களும் சீருடை மாற்றத்தில் கவனத்தில் கொள்ளவில்லை எனத்தெரிகிறது. இந்த சீருடை மாற்றம் செவிலியர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே தரும். எனவே பரிசீலனை செய்து ஒரே சீரான உடல்வாகிற்கு வசதியான சீருடையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: