இஎஸ்ஐசியில் 5 ஆயிரம் காலி பணியிடம்

புதுடெல்லி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (இஎஸ்ஐசி) 5,000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தெரிவித்தார்.  டெல்லி மயூர் விஹாரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் அடிக்கல் நாட்டி வைத்து மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் பேசியதாவது:இஎஸ்ஐசியில் பல்வேறு பதவிகளுக்கான 5,000 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மருத்துவமனை 6800 சதுர அடியில் கடப்படுகிறது.  

வெளி  நோயாளிகள் பிரிவு மற்றும் லேப் வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும்.  தொழிலாளர்கள் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை பெற அடல் பிமித் வியாகி கல்யாண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த  திட்டத்தில் சேர்ந்த தொழிலாளர் வேலையை இழந்தால் அவருடைய வங்கிக் கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: