பிரம்ம குமாரிகள் சமாஜம் சார்பில் 12 ஜோதிர்லிங்கம் தரிசன கண்காட்சி: திமுக எம்எல்ஏ பங்கேற்பு

தாம்பரம்: தாம்பரம் அருகே  நேற்று முதல் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சியை பிரம்மகுமாரிகள் சமாஜம் தொடங்கி உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியில் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா பங்கேற்றார். தாம்பரம், ராஜகீழ்ப்பாக்கம் பகுதி தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மகுமாரிகள் சமாஜம் சார்பில் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நேற்று துவங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்பி கே.என்.ராமசந்திரன், தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் அதிமுக எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

வரும் 30ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் சோம்நாத், விஸ்வநாத், திரியம்பகேஸ்வரர், ஓங்காரேஸ்வர், மகாகாளேஸ்வரர், நாசஃப்யார், கிருஷ்ணேஸ்வர், பீமா சங்கர், கேதார்நாத், மல்லிகார்ஜுன், ராமேஸ்வர் என 12 ஜோதிர்லிங்கங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: