இந்தி பயின்றால் அரசுப்பணி மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி: மார்க்சிஸ்ட் கம்யூ கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதுநிலை, இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணித் தேர்வில் இந்தி மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தி தெரியாத தமிழ்நாட்டு மாணவர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவது தடுக்கப்பட்டுள்ளது.அதே போன்று, மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம், சுருக்கெழுத்தாளர் பணிக்கான தேர்விலும் இந்தி கட்டாயம் என அறிவித்துள்ளது. சுருக்கெழுத்தாளர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தால், பணி நிரந்தரம் ஆக வேண்டுமெனில் இந்தி சுருக்கெழுத்து படித்து தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இந்தி மொழி படித்தவர்களுக்கே மத்திய அரசுப்பணிகள் என்கிற ஜனநாயக விரோத நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

மத்திய அரசின் இந்த இந்தி திணிப்பு நடவடிக்கையை மாநில அரசும் வேடிக்கை பார்த்து வருகிறது. இந்தி பேசாத மக்கள் மீது அநீதியாக இந்தியைத் திணிக்கும் இத்தகைய முயற்சிகள் கண்டிக்கத்தக்கது. உடனடியாக இவற்றை கைவிட வேண்டும். மேலும், தமிழகத்தில் எட்டு பல்கலைக்கழகங்களில் 33 படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றவை என தடாலடியாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களை பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே வகுத்துள்ள நிலையில், இந்தப் பாடத்திட்டங்கள் தகுதியற்றவை என்ற தமிழக அரசின் அறிவிப்பு  அநீதியானது. மாணவர்களின் நலனுக்கு விரோதமான இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: