நிதி மசோதா நிறைவேறாததால் அமெரிக்காவில் 2ம் நாளாக அரசு அலுவலகங்கள் மூடல்: பிரச்னைக்கு தீர்வு காண டிரம்ப் முயற்சி

வாஷிங்டன்:  அமெரிக்காவில் 2வது நாளாக நேற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தான் அதிபரானால், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் சுவர் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்நிலையில், எல்லையில் பிரமாண்ட தடுப்பு சுவர் கட்டுவதற்காக உள்நாட்டு நிதி 5 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என நாடாளுன்றத்தை டிரம்ப் கேட்டுக்கொண்டார். நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூடியது. அப்போது, அதிபர் சார்பில் 5 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எல்லையில் கட்டப்படும் தடுப்பு சுவருக்கு உள்நாட்டு நிதியை வழங்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால், செனட் சபையில் இந்த நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இதன் காரணமாக, அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவினங்களுக்கான நிதி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. மத்திய அரசு அலுவலகங்களுக்கான செலவின நிதி மசோதாவும் நிறைவேற்றப்படாததால் அரசு அலுவலகங்கள் நேற்று முன்தினம் மூடப்பட்டன.  2வது நாளாக நேற்றும் அலுவலகங்கள் செயல்படவில்லை. அமெரிக்காவில் இந்தாண்டு அரசு அலுவலகங்கள் முடங்குவது இது மூன்றாவது முறையாகும். இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கிறிஸ்துமசுக்காக புளோரிடா செல்லாமல் வெள்ளை மாளிகையில் தான் இருக்கிறேன். கடினமாக உழைக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அரசு நி்ர்வாகம் முடங்கிய பிரச்னை பல நாட்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: