சவுதி இளவரசர் தலால் பின் அப்துல்அஜிஸ் உடல்நலக்குறைவால் காலமானார்

ரியாத்: சவுதி அரேபியாவின் இளவரசர் தலால் பின் அப்துல் அஜிஸ் உடல்நலக்குறைவு காரணமாக தனது 87-வது வயதில் காலமானார். கடந்த 1950 மற்றும் 1960-ம் ஆண்டுகளில் தகவல் தொடர்பு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிககளை அவர் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை, கார் ஓட்டுவதற்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை இளவரசர் அப்துல் அஜிஸ் கொண்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது பொறுப்புகள் அனைத்தும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை இளவரசர் அப்துல் அஜிஸ் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: