இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: நாளை முதல் போராட்டம் அறிவிப்பு

சென்னை: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் நாளை முதல் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாட்டை களையக் கோரி, பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஞாயிறன்று திட்டமிட்டபடி, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் அமல்படுத்தப்பட்ட 6வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடு இருந்ததாகவும், அது இதுவரை களையப்படாததால் ஞாயிற்றுகிழமை முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், உடன்பாடு எட்டப்படாததால், திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சு நடத்த இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், திட்டமிட்டபடி, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: