ரபேல் விமான பேர ஒப்பந்தம் பிரதமர் மோடியே ஒரு ஏஜென்ட் தனியாக எதற்கு இடைத்தரகர்?: ஆனந்த் சர்மா பதிலடி

மும்பை: ரபேல் விமான பேர ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஏஜன்டாக செயல்பட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். ரபேல் விமான பேர ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் மத்திய அரசு இதை மறுத்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குத்ரோச்சி ‘மாமா’ அல்லது கிறிஸ்டியன் மைக்கேல் ‘அங்கிள்’ போன்ற நபர்களுடன் சேர்ந்து ராணுவ ஒப்பந்தங்களை  செய்து கொண்ட சரித்திரம் காங்கிரசுக்கு உள்ளது. இதுபோன்ற நபர்கள் இல்லாமல் ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை” என்று கூறினார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். சர்மா இதுகுறித்து மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:போபர்ஸ் ஒப்பந்தத்தில் நாடாளுமன்ற கூட்டுக் கமிட்டி (ஜெ.பி.சி.) விசாரணை நடத்தியதை பிரதமர் மோடிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். எனவே ரபேல் போர் விமான பேரம் தொடர்பாகவும் நாடாளுமன்ற கூட்டு கமிட்டி  விசாரணைக்கு அவர் தயாராக இருக்க வேண்டும். ராணுவ பேரத்தில் இந்த தடவை ஏஜன்ட் இல்லை. காரணம். பிரதமர் மோடியே ஒரு ஏஜன்டாக செயல்பட்டிருக்கிறார்.ரபேல் போர் விமானத்தின் விலை திடீரென  அதிகரிக்கப்பட்டதற்கும் ஒப்பந்தத்தில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கும் மோடிதான் பொறுப்பு. மோடி எந்த தவறும் செய்யவில்லை என்றால் அவர் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: