கஜா புயலால் மற்றுமொரு உயிர் பறிபோனது..: தஞ்சை விவசாயி மகன் சிங்கப்பூரில் தற்கொலை!

தஞ்சை: கஜா புயல் பாதிப்பால் தென்னை மரங்களை இழந்த தஞ்சை விவசாயியின் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பட்டுக்கோட்டை அடுத்த திட்டக்குடி கிராமத்தை சேர்ந்த 32 வயதான கலைவாணன், கடந்த 2 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கஜா புயலின் காரணமாக திட்டக்குடியில் இருந்த அவரது வீடு சேதமடைந்து, தென்னை மரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் அழிந்த தகவலறிந்த கலைவாணன், கடந்த 17ம் தேதியன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே கடன் வாங்கி சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றிருந்த அவர், அந்த கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், புயலால் விவசாயமும் பாதிக்கப்பட்டு தனது குடும்பத்தின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியதால் கலைவாணன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. கலைவாணனின் உடல், சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு அவரது சொந்து ஊருக்கு எடுத்து வரப்பட்டது. புயல் பாதிப்பை குறைத்து மதிப்பிடாமல் உரிய நிவாரணத்தை விரைந்து வழங்கினால் மட்டுமே இதுபோன்ற விவசாயிகள் தற்கொலையை தடுக்க முடியும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: