இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் போதை ஆசாமி கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் சண்முகம் (50). நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் சண்முகம் கொடுங்கையூர்-எருக்கஞ்சேரி சாலையில் போலீசாருடன்  வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது பைக்கில் வேகமாக வந்தவரை மடக்கி விசாரித்தபோது மதுபோதையில் இருந்தது தெரிந்தது.

இதனால் அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.  இதில் ஆத்திரம் அடைந்த அந்த  ஆசாமி இன்ஸ்பெக்டர் சண்முகத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து போலீசார் அவரை பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் வியாசர்பாடி, புதுநகரை சேர்ந்த சுலைமான் (57) என்பதும், அதே பகுதி தனியார் நிறுவன செக்யூரிட்டி என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: