அந்தமானில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு : தமிழ் பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் போராட்டம்

போர்ட் பிளேர் : அந்தமானில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழ், தெலுங்கு பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்தமானில் தொடக்கப்பள்ளியில் பணியாற்ற புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் தகுதித்தேர்வை முறைப்படி எழுதி அதிக மதிப்புடன் தேர்ச்சி பெற்றும் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர் தங்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற இந்தி, பெங்காலி பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தமான் உள்ள தமிழர்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேட்டை கண்டித்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் என்ற இடத்தில் உள்ள கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 224 ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காரணம் கேட்ட நிலையில், முறையான தகவல் எதுவும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த துறையில் மட்டுமல்லாது ஆந்திராவில் நடைபெறும் பல்வேறு அரசு தேர்வில் இதேபோல் முறைகேடு நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: