விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

விருதுநகர்: பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க கோரி விருதுநகர் மாவட்டத்தில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடந்து வருகிறது. பட்டாசு ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சிவகாசி உட்பட 600க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பட்டாசால் சுற்றுசூழல் மாசுபடுவதாகக் கூறி நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து பட்டாசு உற்பத்திக்கு போடப்பட்டுள்ள தடைகளை தகர்த்தக் கோரி சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் பட்டாசு ஆலையை திறக்க கோரியும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரியும் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அச்சம்தவிர்த்தான், நாச்சியார்பட்டி, திருவேங்கடம், திருவேங்கடபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும் பட்டாசு தொழிலாளர்கள் வீட்டில் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: