அணுஆயுதங்களை அழிப்பது நிறுத்தப்படும் : வடகொரியாவின் திடீர் மிரட்டலால் அமெரிக்கா அதிர்ச்சி

பியோங்கியாங்: அமெரிக்கா - வட கொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் அணுஆயுத அழிப்பு நிறுத்தபடும் சூழல் ஏற்படும் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ட்ரம்ப் -கிம் சந்திப்பிற்கு பின் அமெரிக்கா, வட கொரியா நட்புறவு சிறிது முன்னேற்றம் அடைந்திருந்தது. இந்நிலையில் வட கொரியாவை சேர்ந்த 3 அமெரிக்க அதிகாரிகளுக்கு பணி தடை விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டது. மனித உரிமை மீறல் தொடர்பாக வடகொரியாவின் மூன்று அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியிருந்தது. மூவரில் ஒரு அதிகாரியான சோ ராயிங் ஹே கொரிய அதிபருக்கு நெருக்கமானவர். எனவே இதனால் எரிச்சலடைந்த வடகொரியா அமெரிக்காவிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில் தங்கள் நாட்டுடன் நட்புறவை பேணுவதில் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால்  வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரத் தடைகளை விதிப்பதும், அவர்களது பணிகளை தடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நடவடிக்கைகளால் நாங்கள்  அணுஆயுதம் உற்பத்தி செய்வதை கைவிடுவோம் என நீங்கள் (அமெரிக்கா) நினைத்தால்  தவறான கணிப்பாகும். மேலும் நீங்கள் மேற்கொண்டு வரும் வேண்டாத நடவடிக்கைகள், எங்களுடைய ஆணுஆயுதங்களை அழிப்பிற்கான பாதைக்கு நிரந்தர தடையை ஏற்படுத்தும்  என்று வடகொரியா மிரட்டியுள்ளது. முன்னதாக தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது. இச்சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: