காஷ்மீரில் பாதுகாப்பு படை தாக்குதல் : 3 தீவிரவாதிகள் உட்பட 11 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீரின் சிர்னோ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு வீரர்களும் சுட்டனர்.

25 நிமிடங்கள் நடந்த இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் முன்னாள் ராணுவ வீரர். அகமது தாகூர் என்ற அந்த தீவிரவாதி காந்த்முல்லா பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றியபோது ராணுவத்தின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கடந்த ஆண்டு ஜூலையில் மாயமானார். பின்னர், தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில், நேற்று இருதரப்புக்கும் நடந்த மோதலை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் குவிந்தனர். அப்போது பொதுமக்கள் பாதுகாப்பு படை வாகனத்தின் மீது ஏறி முழக்கமிட்டனர். அவர்களை கீழே இறங்குமாறு வீரர்கள் எச்சரித்தும் இறங்கவில்லை. இதனால் பொதுமக்கள் மீது வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பொதுமக்களில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: