இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தது ஆஸ்திரேலியா அரசு

சிட்னி: இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல் அவில் இருந்தது. இந்நிலையில், அதை மாற்றி ஜெருசலேமை தலைநகராக இஸ்ரேல் அறிவித்தது. இதை அமெரிக்காதான் முதலில் ஏற்றது. தனது தூதரகத்தையும் அங்கு மாற்றியது. ஆனால், இதற்கு பாலஸ்தீனம் உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது். எனினும், இஸ்ரேலில் அமைதி திரும்பும் வரை  தூதரகத்தை டெல் அவிலில் இருந்து மாற்ற முடியாது என அது தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: