பா.ஜ-விற்கு எதிரான மக்களின் மனநிலையே 5 மாநில தேர்தல் முடிவுகள் : நவீன் பட்நாயக் கருத்து

புவனேஸ்வர்: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தெலுங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. மிசோரமில், மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், பாஜ.வை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆட்சியை பிடித்துள்ளது. மேற்கண்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்,  பா.ஜ-விற்கு எதிரான மக்களின் மனநிலையே 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.

3 மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சியை பிடித்த டிஆர்எஸ் கட்சிக்கும், மிசோரம் மாநிலத்தில் அரியணை ஏறியுள்ள எம்என்எஃப் கட்சி தலைவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். 5 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்குமா என செய்தியாளர்கள் நவீன் பட்நாயக்கிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இந்த தேர்தல் முடிவுகள் மக்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளிடமிருந்து தனது பிஜூ ஜனதா தளம் எப்போதும் இடைவெளி வைத்துள்ளது. சத்திஸ்கரில் புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில், அவர்களின் மனநிலை மாறும் என நினைப்பதாக கூறினார். மகாநதி நீர் பங்கீடு விவகாரத்தில் விரைவில் சுமூக முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: