2 தொகுதியிலும் தோற்ற மிசோரம் முதல்வர்

மிசோரமில் 5 முறை முதல்வராக பதவி வகித்தவர் லால் தன்ஹவ்லா. 76 வயதாகும் இவர் கடந்த 2008 முதல் முதல்வராக நீடிக்கிறார். 2013ல் 4வது முறையாக முதல்வராக சாதனை படைத்தார். இம்முறை சாம்பாய் தெற்கு  மற்றும் செர்ச்சிப் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட அவர் இரண்டிலும்  அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தார். சாம்பாய் தொகுதியில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சியிடமும், செர்ச்சிப் தொகுதியில் சோரம் மக்கள்  இயக்கம் (இசட்பிஎம்) வேட்பாளரிடமும் தன்ஹவ்லா தோற்றார்.

ராஜஸ்தான், மபி முதல்வர் யார்?ராகுலுக்கு அடுத்த சவால்ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இக்கட்சி சார்பில் அடுத்த முதல்வராக பதவியேற்கப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசாரத்தின் போதும், யார் முதல்வர் என்ற  கேள்விக்கு காங்கிரஸ் பதிலளிக்க மறுத்துவிட்டது. தற்போது முதல்வருக்கான போட்டியில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டும், மூத்த தலைவர் அசோக் கெலாட்டும் உள்ளனர். இதில், இளம் தலைவரான சச்சின்  பைலட், ராகுலுக்கு நெருக்கமானவர். இத்தேர்தலுக்காக கடுமையாக பணியாற்றி இருக்கிறார். இதனால் ராகுலின் முதல் தேர்வு சச்சின் பைலட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மூத்த தலைவரான கெலாட், கட்சியில் பலமிக்க தலைவராக உள்ளார். இவரது ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். இதனால் இவருக்கு முதல்வர் பதவி தரப்படாவிட்டால், பல்வேறு அதிருப்தி அலைகளை  ஏற்படுத்தக்கூடும். இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் ராகுலுக்கு நிச்சயம் கடும் சிரமம் இருக்கும். அம்மாநில காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. இதில் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட்டா அல்லது சச்சின் பைலட்டா என்பது இன்று தெரிந்துவிடும். இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமை தாங்குகிறார்.

இதே போல, மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், முதல்வரை தேர்வு செய்வதில் சிரமம் உள்ளது. மூத்த தலைவர் கமல்நாத்துக்கு வாய்ப்பளிப்பதாக, ராகுலின் ஆதரவு பெற்ற  ஜோதிர்ராதித்யா சிந்தியாவுக்கு வாய்ப்பளிப்பதா என்ற குழப்பநிலை நிலவுகிறது. கமல்நாத்தான் அடுத்த முதல்வர் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடுகின்றனர். இதுகுறித்து சிந்தியா கூறுகையில், ‘‘எதுவும் இன்னும் முடிவாகவில்லை. தேர்தல் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார்.

சரியாக ஓராண்டில் சாதித்த ராகுல் காந்தி

கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அப்போது, அவரது தலைமையை பாஜ கடுமையாக விமர்சித்தது.  அவர் பதவியேற்று ஓராண்டு காலத்தில் நல்ல  மாற்றத்தை தந்துள்ளார். 5 மாநில தேர்தலில் கடுமையாக பணியாற்றிய ராகுல் 82 பேரணிகளில் பங்கேற்றார். அவர் தனது பிரசாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்தார்.  ரபேல் விமான ஒப்பந்தம், நீரவ் மோடி  உள்ளிட்ட விவகாரங்களை பேசினார். இது மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி காங்கிரசுக்கு 3 மாநிலங்களில் வெற்றியை தேடித் தந்துள்ளது. ஓராண்டில் தலைவராக ராகுல் தேசிய அரசியலிலும் பெரும் மாற்றத்தை  கொண்டு வந்துள்ளார் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் புகழ்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: