மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு

போபால் : மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பதில் பாஜக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சிகளும் ம.பி.யில் மாறி மாறி முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜக 107 , காங்கிரஸ் 109 இடங்களில் முன்னிலை வகிகின்றனர். இதனிடையே மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை கோரும் முயற்சியில் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: