நீதிமன்ற அனுமதியுடன் தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் தியான நிகழ்ச்சி நடத்துவோம் : ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

தஞ்சை: நீதிமன்ற அனுமதியுடன் தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் தியான நிகழ்ச்சி நடத்துவோம் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் தியான நிகழ்ச்சி நடத்த ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. மேலும் அரசுக்கு சரமாரியாக கேள்விகளையும் எழுப்பியது. தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் பழமையானது. தொல்லியல் பாரம்பரியமிக்கது என யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இங்கு வாழும்கலை அமைப்பின் மூலம் 2 நாட்கள் தியான நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டது.

அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார். இதற்காக கோயில் வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதித்தால் கோயிலின் பாரம்பரியம் கெட்டுப்போகும். இந்த நிகழ்ச்சியால் கஜா நிவாரண பணிகள் பாதிக்கும். பாரம்பரிய தொல்லியல் பகுதியான தஞ்சை பெரிய கோயில் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். எனவே, தஞ்சை பெரிய கோயிலில் வாழும்கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்.

அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அவசர வழக்காக நேற்று விசாரித்தனர். நீதிபதிகள், ஏற்கனவே ஒருமுறை கும்பாபிஷேகம் நடந்தபோது தீவிபத்து ஏற்பட்டது. இங்குதான் நடத்த வேண்டுமா? வேறு இடமே இல்லையா? இங்கு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க முடியாது. நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இங்கு எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை;

நிகழ்ச்சி தொடர்பான எந்த பொருட்களும் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து தஞ்சை கலெக்டர், எஸ்பி, தொல்லியல் துறையினர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். ஏதேனும் மீறியிருந்தால் இந்த நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பிக்கும் என்று உத்தரவிட்டனர். இதனையடுத்து கோயிலில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு தனியார் மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. நீதிமன்ற அனுமதியுடன் தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் தியான நிகழ்ச்சி நடத்துவோம் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: