இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை ரத்து செய்யவோ, விசாரணைக்கு தடை விதிக்கவோ முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை ரத்து செய்யவோ அல்லது விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவோ கண்டிப்பாக  முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று திட்டவட்டமாக மறுத்து உத்தரவிட்டுள்ளது.  இரட்டை இலை சின்னத்தைப்பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ₹50கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி டிடிவி.தினகரன், ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை  டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.   இதைத்தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கர்நாடகாவை சேர்ந்த டிடிவி.தினகரன் நன்பர் மல்லிகார்ஜுனா மற்றும் பல்வேறு மாநிலங்களை சார்ந்த ஹவாலா புரோக்கர்களை டெல்லி குற்றவியல் போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரை தவிர டிடிவி.தினகரன் அவரது மல்லிகார்ஜுனா உட்பட மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேற்கண்ட வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி டிடிவி.தினகரன், அவரது நன்பர் மல்லிகார்ஜுனா பி.குமார் ஆகியோர் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகி  கையெழுத்திட்டு குற்றப்பதிவின் நகலை பெற்றுக்கொண்டனர்.இதையடுத்து மல்லிகார்ஜுனா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்  தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதில் நேற்று தீர்ப்பளித்த    டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஏகே.பதக் ‘‘இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது. மேலும் அதுகுறித்த விசாரணைக்கும் இடைக்கால  தடை எதுவும் விதிக்க முடியாது. மேலும் வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க விசாரணை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பபடுகிறது என தெரிவித்த நீதிபதி அடுத்த விசாரனையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது’’  என உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: