போர்ப்ஸ் பத்திரிக்கையின் 2018-ல் அதிக வருவாய் பெற்ற 100 இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியீடு: சல்மான் கான் முதல் இடம்

மும்பை: 2018-ம் ஆண்டின் அதிக வருவாய் ஈட்டிய 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை (Forbes) இன்று வெளியிட்டது. இதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.253.25 கோடிகள் வருவாய் ஈட்டி மூன்றவாது முறையாக முதல் இடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி (228.09 கோடி) 2-வது இடத்திலும், பாலிவுட் நடிகர் அக்சய் குமார் (185 கோடி) 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் தீபிகா படுகோனே (112.8 கோடி) 4-ம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் போர்ப்ஸ் பத்திரிக்கையில் முதல் முறையாக டாப் 5 பட்டியலில் இடம்பெற்ற முதல் பெண் பிரபலம் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து மகேந்திர சிங் தோனி (101.77 கோடி) 5-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (ரூ.66 கோடி) 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

தமிழ் நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (ரூ.50 கோடி) 14-ம் இடத்திலும், தளபதி விஜய் (ரூ.30 கோடி) 26-ம் இடத்திலும், விக்ரம் (ரூ.26 கோடி) 29-ம் இடத்திலும் உள்ளனர். சூர்யாவும், விஜய் சேதுபதியும் 34-வது இடத்தில் உள்ளனர். இதில் இவர்களது வருமானம் ரூ.23 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நயன்தாரா ரூ.15.17 கோடி வருவாயுடன் 69-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டில் போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகை என்ற பெருமையை நயன்தாரா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: