ராஜஸ்தானில் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம்: தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை

ஜெய்பூர்: ராஜஸ்தானில் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கு டிசம்பர் 7-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தேர்தல் அகஸ்ட்தாவெஸ்ட் லெண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் இடைத்தரகராக இருந்த மைக்கேல் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ராஜஸ்தானில் முழு பெரும்பான்மையுடன் மீண்டும் நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என உறுதியாக கூறுகிறேன்.

வசுந்தரா ராஜே மீண்டும் முதல்வராவார். காங்கிரஸின் ஜாதி மற்றும் வாரிசு அரசியலை மக்கள் புறந்தள்ளி உள்ளனர் என கூறினார். எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை எனவும் கூறினார். ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய இடைத்தரகரை கைது செய்ததில் அவர்களுக்கு என்ன பிரச்னை என தெரியவில்லை என தெரிவித்தார். இது போன்ற குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கின்றனவா எதிர்க்கட்சிகள்? என கேள்வி எழுப்பிய அவர், புலந்த்சார் வன்முறை சம்பவம் துரதிருஷ்டவசமானது எனவும் தெரிவித்தார். இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதனை அரசியல் ஆக்க வேண்டாம் எனவும் கூறினார். சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்ததும் அனைத்தும் தெளிவாக தெரிந்து விடும் என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: