அரசியல் ஆதாயத்திற்காகவே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி : திருச்சி ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் புகார்

திருச்சி: முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு கண்டம் தெரிவித்து திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன்,முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய முத்தரசன், மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டால்தான் பிரச்சனை தீரும் என கூறியுள்ளர். ஸ்டாலின் தலைமையில் தமிழக மக்கள் அணி திரள வேண்டும் என்றும் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது.

புயல் பாதிப்புக்கு பின்னர் இன்னும் மக்கள் அரசின் நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர். மேகதாது அணை திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காவிரியில் தண்ணீரை முழுமையாக நிறுத்த கர்நாடக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இன்றைக்கு நடக்கும் ஆர்ப்பாட்டம் மேகதாது பிரச்சனைக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக தான் என்றார்.

பேராட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், அரசியல் ஆதாயத்துக்காக மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைமையிலான அணியை பலவீனப்படுத்த பாஜக முயற்சி செய்துவருவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

உயிரே போகும் நிலை வந்தாலும் எங்கள் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். போராட்டத்தில் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு கண்டம் தெரிவித்தார். அரசியல் லாபத்திற்காகவே மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகளை நசுக்க முயலுவதாக சாடினார். கர்நாடகத்திற்கு மேகதாது அணை கட்ட மத்திய அரசு மறைமுகமாக உதவுவதாக அவர் சாடினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: