‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானம் உடலை எடுத்து வந்தது புஷ்சுக்கு வாஷிங்டனில் அஞ்சலி

ஹூஸ்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் (94) கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் நகரில்  இறந்தார். அவருக்கு வாஷிங்டனில் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டது. அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கும் வகையில், ஹூஸ்டன் நகரில் இருந்து சீனியர் புஷ் உடலை எடுத்து வர தனது ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை அனுப்புவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் போது, அந்த விமானம் ‘ஏர்போர்ஸ் ஒன்’ என அழைக்கப்படும். தற்போது சீனியர் புஷ் உடலை அந்த விமானம் எடுத்து வரும் அதற்கு ‘ஸ்பெஷல் ஏர் மிஷன்41’’ என பெயரிடப்பட்டுள்ளது. 41வது அதிபராக புஷ் இருந்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் இருந்து அதிபர் டிரம்ப் வாஷிங்டன் திரும்பியதும், அந்த விமானம் ஹூஸ்டனுக்கு சென்று சீனியர் புஷ் உடலை எடுத்து வந்தது. அவ ரது உடல் கேபிடல் ரோடுண்டா அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக புதன் கிழமை காலை வரை வைக்கப்படுகிறது. அதன்பின் அவரது உடல் மீண்டும் டெக்சாஸ் கொண்டு செல்லப்படும். சீனியர் புஷ்ஷின் மனைவி பார்பரா, அவரது மகள் ராபின் கல்லறை அருகே  உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த  இறுதிச்சடங்கில் அதிபர் டிரம்ப்,  அவரது மனைவி மெலனியா கலந்து கொள்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: