ஸ்வீடனில் விமான நிலைய முனையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை மோதி விபத்து

ஸ்வீடன்: ஸ்வீடனில் விமான நிலைய முனையத்தில் இருந்த கட்டிடத்தின் மீது ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை மோதி விபத்தில் சிக்கிய நிலையில், பயணிகள் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் புறப்பட்ட ஏர் இந்தியா 167 விமானம், அந்நாட்டு நேரப்படி மாலை ஐந்தே முக்கால் மணியளவில் தலையிறங்க முயற்சித்தது. ஆனால், அங்கிருந்த கட்டிடம் ஒன்றின் மீது அதன் இடது புற இறக்கை மோதி சிதைந்தது. இருந்த போதும், 179 பயணிகளும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். அதே விமானத்தில் டெல்லி திரும்ப இருந்த பயணிகள் வேறு ஏர் இந்தியா விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய விமானத்தின் பணிக்குழு பணி செய்வதில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் இதே போன்று ஏர் இந்தியா விமானம் திருச்சியில் இருந்து துபாய் சென்றபோது, விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் ஆண்டனா மீது மோதியது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பரில் ஏர் இந்தியா விமானம் மாலத்தீவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஓடுதளத்தில் தவறுதலாகத் தரையிறங்கியதும் குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: