பிளிப்கார்ட்டை முந்தியது அமேசான்

புதுடெல்லி: ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் விற்பனையில் பிளிப்கார்ட்டை விஞ்சியுள்ளது என பார்க்லேய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் அமேசானின் மொத்த விற்பனை மதிப்பு 750 கோடி டாலர். ஆனால் இதே நிதியாண்டில் பிளிப்கார்ட் 620 கோடி டாலருக்கு மட்டுமே விற்பனை செய்துள்ளது. 2016-17 நிதியாண்டில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான விற்பனையில் ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை.

ஆனால் இந்த ஆண்டு அமேசான் முந்திவிட்டது. அமேசான் வருவாய் 82 சதவீதமும், பிளிப்கார்ட் வருவாய் 47 சதவீதமும் அதிகரிக்கும் என பார்க்ஸ்லேய்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரித்துள்ளது. ஆனால், மேற்கண்ட கணிப்பு அறிக்கை குறித்து அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: