அஞ்சுகிராமம் அருகே இரட்டை வாலுடன் அதிசய பல்லி

அஞ்சுகிராமம்: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ஜேம்ஸ்டவுன் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் ஆர்.வி.சுந்தர்ராஜ். திமுக பேரூர் துணைச் செயலாளராக உள்ளார். மேலும் அந்த பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று ஒரு அதிசய பல்லி காணப்பட்டது. பொது வாக பல்லிக்கு ஒற்றை வால்தான் காணப்படும். ஆனால் இந்த பல்லி இரட்டை வாலுடன் காணப்பட்டது. ஒரே வாலாக ெதாடங்கி பின்னர் இரண்டு கிளைகளாக பிரிந்து அதன் வால் இருந்தது. இது கடைக்கு வந்த அனைவரையும் ஈர்த்தது. மேலும் இந்த அதிசய இரட்டை வால் பல்லியை அந்த பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள், பொது மக்கள் என்று பல தரப்பை சேர்ந்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சிலர் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தும் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: