மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சவார்த்தை நடத்த தயார்: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்

பெங்களூரு: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சவார்த்தை தயார் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் சுமார் ரூ.5,192 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டது. இது தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்தில் கேரள அரசு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான ஒப்புதலை மத்திய நீர்வளத்துறை ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள தமிழக அரசு, இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதமும் எழுதியுள்ளார்.

ஆனால், மேகதாது அணை விவகாரத்தில் மிகவும் முனைப்புடன் இருந்து வரும் கர்நாடக அரசு, இவ்விகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளார். அதனடிப்படையில் தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து அணை விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ளதாக அம்மாநில நீர்வள்ததுறை அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது மேகதாது அணையின் முக்கியத்துவத்தை தமிழக அரசுக்கு எடுத்துரைப்பேன் என அவர் கூறியுள்ளார். மேலும், பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையின் பெரிய வரப்பிரசாதமாக இந்த அணை விளங்கும் என்பது குறித்தும், தமிழகத்துக்கு நீர் தேவைப்படும்போதெல்லாம் அதனை வழங்கும் சாத்தியக்கூறு இந்த அணையை அமைத்தால் ஏற்படும் போன்ற விஷயங்களை மேற்கோள்காட்டி எடுத்துறைக்க சுமூக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து தமிழக அரசு சார்பில் எவ்விதமான முடிவும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: