இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஐக்கிய தேசிய கட்சி பிளவால் ராஜபக்சே உற்சாகம்

கொழும்பு: இலங்கையில் நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் ரணில் கட்சி உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரணிலுக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக்கும் சிறிசேனவின் முயற்சியை நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் மூலம் எதிர்க்கட்சிகள் தடுத்தன. ஆனால் வாக்கெடுப்பை மின்னணு முறையிலோ அல்லது பெயர் வாரியாகவோ மட்டுமே நடத்த வேண்டும் என்பது அதிபர் சிறிசேனவின் கோரிக்கையாகும். இதற்கிடையே நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த மோதல்களால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. நாளை மீண்டும் அவை கூடவுள்ளது.

இந்நிலையில் ரணிலின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 3 பிரிவுகளாக பிரிந்து நிற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரணிலுக்கு ஆதரவாக சிலரும் கட்சியின் இணைத்தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்க வேண்டும் என்று சிலரும் விரும்புவதாக தெரிகிறது. கட்சியை காப்பாற்றிய சபாநாயகர் கரு ஜெயசூரியவை பிரதமராக்கவும் ஒரு பிரிவினர் முயன்று வருகின்றனர். இதனால் மீண்டும் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது ராஜபக்சேவுக்கு சாதகமாக முடியும் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: