தென்கொரியாவை சேர்ந்தவர் இன்டர்போல் தலைவராக கிம் ஜோங் யங் தேர்வு: ரஷ்ய அதிகாரியை வீழ்த்தினார்

துபாய்: இன்டர்போல் அமைப்பின் தலைவராக தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜோங் யங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  சர்வதேச அளவில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக, சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பு (இன்டர்போல்) ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு தலைமறைவான சர்வதேச குற்றவாளிகளை தேடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த அமைப்பில் 194 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.  இந்த நிலையில், இன்டர்போல் தலைவராக இருந்த மெங் ஹாங்வேய் ஊழல் குற்றச்சாட்டில் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, இந்த அமைப்பின் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில், தென் கொரியாவை சேர்ந்த கிம் ஜோங் யங்கும், ரஷ்யாவின் அலெக்சாண்டர் புரோகோப்சும் போட்டியிட்டனர். அமெரிக்க ஆதரவுடன் போட்டியிட்ட கிம் ஜோங் யங், இன்டர்போல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அலெக்சாண்டர் தோல்வியடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: