முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை : ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அம்மா உணவகம் குறித்தும் அவதூறாக பேசியதாக, சந்திரகுமார் மீது திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அப்போதைய முதல்வர் தரப்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது எம்எல்ஏவாக  இல்லாததால் தன் மீதான அவதூறு வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்று மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சந்திரகுமார் மீதான அவதூறு வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: