மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவவில்லை காங்கிரசார் நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்ப வேண்டுகோள்: திருநாவுக்கரசர் அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகளால் நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறவில்லை. மத்திய அரசும், தமிழக அரசும் நிதி உதவிகளையோ, நிவாரண உதவிகளையோ, அத்தியாவசியப் பொருட்களையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக சென்றடைய போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரிசி, உணவுப் பொருட்கள், பால், குடிநீர் ஏதுமின்றி பல இடங்களில் பட்டினி தொடர்கிறது.

அரிசி, ஜமுக்காளம், போர்வை, வேட்டி, சேலை, கைலி, துண்டு, பால் பவுடர், ரொட்டி, பிஸ்கட், குடிநீர், பாத்திரங்கள், மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசியப் பொருட்களை, புயல் பாதிப்பில்லாத மற்ற மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் நிவாரணப் பொருட்களை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கட்டாயப்படுத்தாமல் திரட்டலாம்.  அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்களை வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இப்பணிகளை உடனே தொடங்க கேட்டுக் கொள்கிறேன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: