உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் அரை இறுதிக்கு மேரி கோம் தகுதி : 7வது பதக்கத்தை உறுதி செய்தார்

புதுடெல்லி: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 48 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றார். கால் இறுதியில் சீனாவின் வு யூவுடன் நேற்று மோதிய கோம் (35 வயது), அபாரமாக செயல்பட்டு 5-0 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலமாக குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ள அவர், உலக சாம்பியன்ஷிப்பில் 7வது பதக்கத்தை முத்தமிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி வென்றுள்ள அவர் 2010ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் உலக தொடரில் பதக்கத்தை கைப்பற்றுகிறார். மற்றொரு இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைனும் (69 கிலோ எடை பிரிவு) அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். அவர் கால் இறுதியில் ஆஸ்திரேலியாவின் ஸ்காட் கே பிரான்சஸை வீழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: