திறக்கப்படாமலேயே 450 கோடி வீண் ஆசியாவிலேயே மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு தரைமட்டம்

நாகை: நாகை மாவட்டம் வேட்டைகாரனிருப்பு கோயில்பத்து என்ற இடத்தில் 243 ஏக்கரில் ரூ.450 கோடி செலவில் 1.50 லட்சம் டன் நெல், அரிசி உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைக்கும் அளவில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் 23 சேமிப்பு கிடங்குகளை கட்டியது. இந்த இடத்தை கடற்படை தங்களுக்கு வேண்டும் என்று  கோரியதால் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் ஓர் ஆண்டாக திறப்பு விழா காணாமல்  பூட்டியே வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 15ம் தேதி வீசிய கஜா புயலில் கட்டிடத்தின் சுவர்  இடிந்து விழுந்தது. இரும்பு தகரத்தால் வேயப்பட்ட கட்டிடத்தின் மேற்கூரை முழுவதும் காற்றில் அடித்து செல்லப்பட்டது.  அங்கு கட்டப்பட்ட 23 சேமிப்பு கிடங்குகளும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. அவசர கதியில் கட்டபட்டதால் கிடங்கு இடிந்து தரைமட்டமானதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: