கொடைக்கானல் மலைச்சாலையில் 50க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவு

கொடைக்கானல்:  கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கஜா புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. வத்தலக்குண்டு, பழநி மலைச்சாலைகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சுமார் 1,000 மரங்கள் முறிந்து விழுந்தன. 100க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து நகர் மற்றும் கிராமங்கள் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் கொடைக்கானல் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனித் தீவானது. நிலைமை சீராகும் வரை சுற்றுலாப்பயணிகள் யாரும் கொடைக்கானலுக்கு வர  வேண்டாம் என்றும், இதற்கு ஒரு வாரமாகும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலத்தை சேர்ந்த மகேந்திரன் குடும்பத்தினர், கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று காலை திரும்பியபோது, பெருமாள்மலை அருகே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் கார் திடீரென 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 5 பேரும் உயிர் தப்பினர். கோடிக்கணக்கில் மிளகு வாழை, சோளம் நாசம்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே வாழை, சோளம், முருங்கை, பெரும்பாறை மலைப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சவுக்கு, தேக்கு, குமில், உலகமரம் போன்ற மரங்களும், அவற்றில் படர்ந்து வளர்க்கப்பட்ட மிளகு செடி கொடிகளும் நாசமானது. இதன்மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: