பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு ஸ்டாலின் பாராட்டு : புயல் நிவாரண பணிகளை திமுகவினர் மேற்கொள்ள வலியுறுத்தல்

சென்னை: புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு திமுத தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பை சரி செய்ய அரசு இயந்திரம் வேகத்துடன் இயங்க வேண்டியது அவசியம் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். புயல், மழையால் பாதித்த மக்களுக்கு உணவு, குடிநீர் வசதி உடனே செய்து தர வேண்டும் என்றும், அரசு மீட்பு பணியுடன் இணைந்து திமுகவினர் செயலாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.

புயல் காரணமாக 82,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் நாகை மாவட்டத்தை புரட்டி போட்டுள்ளது. புயல் கரையை கடந்தபோது சுமார் 100 கி.மீ மேலாக பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் பல இடங்களில் தடைபட்டுள்ளது. மின் விநியோகம் சீராக இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: