உள்ளாட்சி துறையில் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள்: டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: உள்ளாட்சித்துறை, ஊழல் குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து உள்ளாகி வருவதற்கு அமமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் புயல் வெள்ள நீர் வடிகால் கட்டுமான பணிகளுக்காகவும் மற்றும் சாலைகள் அமைப்பதற்காகவும் கோரப்பட்ட ரூ.740 கோடி மதிப்பிலான டெண்டரில், மிகப்பெரிய முறைகேட்டில் மாநகராட்சியின் முக்கிய அதிகாரிகள் கூட்டாக ஈடுபட்டிருப்பதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி டெண்டர்களை ரத்து செய்யுமாறு அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

உள்ளாட்சித் துறையில் பூதாகரமாக எழுந்து வரும் தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் நடைபெறுவதைத்தான் எடுத்துரைக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் உள்ளாட்சித் துறைக்கும், அதனை தடுக்கத் தவறும் பழனிசாமி அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: