பெர்ன்ஹில் பகுதியில் குட்டியுடன் வலம் வரும் காட்டெருமை கூட்டம்

ஊட்டி: நீலகிரி மாவட்ட  வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, புலி மற்றும் காட்டெருமை உள்ளிட்ட  அனைத்து விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக,  காட்டெருமைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.விவசாய நிலங்கள்,  தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வரும்  இந்த காட்டெருமைகள் தற்போது குடியிருப்பு பகுதிகளிலும்  வரத்துவங்கியுள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் இந்த காட்டெருமை கூட்டங்கள் வளர்ப்பு கால்நடைகள் போல் வலம் வர துவங்கிவிட்டன.

ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் பேலஸ் பகுதியில் தற்போது குட்டிகளுடன்  காட்டெருமை கூட்டம் வலம் வருகிறது. இந்த காட்டெருமைகள் குடியிருப்புகள், அங்குள்ள மைசூர் பேலஸ் போன்ற பகுதிகளில் வலம் வருகின்றன.  இளம் கன்றுடன் வலம் வரும் இந்த கூட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து  செல்வதுடன், புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர்.விரைவில் இவை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்படும் என வனத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: