ஓசூர் - பானசவாடி இடையேயான ஓசூர் டீசல் தொடர் வண்டிகள் ரத்து நீட்டிப்பு: பயணிகள் அதிர்ச்சி

ஓசூர்: ஓசூர் - பானசவாடி இடையேயான ஓசூர் டீசல் தொடர் வண்டிகள் ரத்து நீக்கப்பட்டுள்ளது. ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பணி நிமித்தமாக பலர் தினசரி சென்று வருகின்றனர், பெங்களூருவில் வசிப்பதற்கு கூடுதல் செலவு செய்யும் சூழ்நிலை உருவாகும் காரணத்தால், ஓசூரில் வசித்து வருகிறார்கள். தகவல் தொழிநுட்பம், மின்னணு நிறுவனம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்யும் ஊழியர்கள் ஓசூரில் இருந்து பெங்களூர் பயணிக்க ரயிலை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். ரயில்வே அமைச்சர் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி பெங்களூர் வந்த போது, பானசவாடி ரயில் நிலையத்தை பார்வையிட்டார், மேலும் புதிதாக புறநகர் ரயில் சேவைகள் இயங்கும் அன்று அறிவிப்பு வெளியிட்டார், அதன் அடிப்படையில் மார்ச் 12-ம் தேதி முதல் பானசவாடி - ஓசூர் - பானசவாடி இடையே 2 ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இதனிடையே தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணிக்காக இந்த ரயில்கள் மே 26-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 25-ம் தேதி வரை ரத்து செய்வதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்தது. ஆனால் இந்த பணியில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து டிசம்பர் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. பானசவாடி - ஓசூர் இடையே 52 கிலோமீட்டர் தூரம், நாள் ஒன்றுக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் தண்டவாளம் புதுப்பித்து இருந்தால் கூட பணிகள் அதிகபட்சமாக 60 நாட்களில் முடித்து இருக்கலாம், ஆனால் 180நாட்களுக்கு மேல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடித்து பயணிகள் பயன்பெறும் வகையில் ரயில்களை இயக்க அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: