லண்டனில் புகழ்பெற்ற சுவாமி நாராயண் கோவிலில் விலையுர்ந்த கிருஷ்ணர் சிலைகள் திருட்டு

லண்டன்: வடக்கு லண்டனில் உள்ள புகழ்பெற்ற சுவாமி நாராயண் கோவிலில் 50 ஆண்டுக் கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளியன்று திருடுபோனது. இதையடுத்து சிலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். கோவில் அதிகாரிகள் தெரிவித்தபடி, சுவாமிநாராயண் கோவிலில் கொள்ளை சம்பவத்தில் திருடப்பட்ட மூன்று கிருஷ்ணர் சிலைகளும் 1970ம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வந்த விலையுயர்ந்த பழமையான சிலைகள் என தெரியவந்துள்ளது. லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் வில்லஸ்டேன் லேன் பகுதியில் புகழ்பெற்ற சுவாமிநாராயண் கோயில் கடந்த 1975ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இங்கிலாந்தின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரிய கற்கோயிலாகவும் சுவாமிநாராயண் கோயில் அமைத்துள்ளது. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டம் முடிந்து கோயிலை திறந்தபோது, அங்குள்ள 50 ஆண்டு பழமை வாய்ந்த கிருஷ்ணர் சிலைகளைக்  காணாமல் போனதை கண்டு கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார்க்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் சிலைகளை திருடியவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: