பரமக்குடியில் ரயில்வே சுரங்கபாதை பணி துவக்கம்

பரமக்குடி: பரமக்குடியில் ரயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் மீது கடந்த 2013ல் பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையை மறைத்து இருபுறங்களிலும் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்று வருவதில் பொன்னையாபுரம், பாலன்நகர், பாம்புவிழுந்தான் பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இருந்தாலும் தடுப்பு சுவரை தாண்டி, பாதுகாப்பற்ற நிலையில் ரயில் பாதையை அப்பகுதிமக்கள் கடந்து சென்று வந்தனர். எனவே அப்பகுதியில் சுரங்க பாதையை விரைவில் துவக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையையேற்று நேற்று சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: