நார்வேயில் எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு கப்பலும் கடற்படை கப்பலும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஆஸ்லோ : நார்வே நாட்டில் எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு கப்பலும் கடற்படை கப்பலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். நார்வே நாட்டின் fjord பகுதியில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கடற்படை கப்பல் ( KNM Helge Ingstad) மீது எண்ணெய் கப்பல் (மால்டிஸ் எண்ணெய் டாங்கர்) மோதியதில் கடற்படை கப்பல் சேதம் அடைந்தது.

இதனிடையே கடற்படை கப்பலில் இருந்த 137 சிப்பந்திகள் அனைவரும் NATO படையின் ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நார்வே கடற்படையினர் கப்பலில் இருந்த சிப்பந்திகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் கடலில் சாய்ந்த நிலையில் மிதந்து வருகிறது.

மூழ்கி கொண்டிருக்கும் கப்பலை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த விபத்தில் சரக்கு கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை என்றும் கப்பலில் இருந்த 23 பேரும் பத்திரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே போர்க்கப்பலில் மீது மோதியதால் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கொஞ்சம் கூட கசியவில்லை என்றும் ஆனால் சரக்கு கப்பல் சிறிது சேதம் அடைந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: